பக்கம்:சொன்னார்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


அன்றாடம் வாழ்க்கையில் உழைத்து உழைத்து அலுத்துக் கிடக்கிறவனுக்கும் சரி, பணத்தை ஈட்டி வைத்துக்கொண்டு, மாளிகையில் இருக்கிறவனுக்கும் சரி-கொஞ்ச நேரமாவது எண்டர்டெயின்மெண்ட் கொடுக்கிறவர்களே கலைஞர்கள்தான்.

—நடிகர் தேங்காய் சீனிவாசன்

தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத கச்சேரிகளுக்குத் தமிழர்கள் போகக் கூடாது.

—திருவாடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை (1-9-1941)

(சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில்)


நான் வேறு வகையான இந்து மதத்தில் நம்பிக்கை யுடையேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமற்றதும், பிராமணனுயினும், சண்டாளனாயினும் சமத்துவமாகச் சகல உரிமைகளுடனும் வாழச் செய்வதும், மக்களை மக்கள் தன்மையுடன் நடத்துவதுமானதுதான் என் இந்து மதம். அத்தகைய இந்துமதத்தில்தான் எனக்கு நம்பிக்கை.

—லாலா லஜபதிராய் (14-4-1928)

(சென்னை கோகலே ஹாலில்)


முப்பது வருடங்களுக்கு முன்பு (1943 ஆகஸ்ட் எட்டாம் தேதி) நான் ராமகிருஷ்ணாவைக் கல்யாணம் செய்துகொண்ட நாளிலிருந்து இன்றுவரை நாங்கள் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வருகிரறோம். தூரத்திலிருந்து என் வாழ்க்கையின் மீது கல் வீச நினைத்தவர்களுக்கு, நாங்கள் இருவருமே இடம் கொடுத்ததில்லை. இதற்கு ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம். அவர் எதை நினைக்கிறாரோ அதையே நானும் நினைப்பேன். அப்படிப்பட்ட மன ஒற்றுமை எங்களிடம் இருப்பது மற்றாெரு காரணமாகும்.

—நடிகை பானுமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/54&oldid=1013990" இலிருந்து மீள்விக்கப்பட்டது