பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

105


நான் கல்கி அவர்கள் வீட்டுக்குப் போனேன். போனதும் கல்கி என்னைப் பார்த்து, “உங்களுக்கு கார் ஒட்டத் தெரியுமா?” என்றார்.

“ஓட்டுவேன்” என்றேன்.

“சரி கீழே வாங்கோ” என்று என்னைக் கூட்டிக் கொண்டு கீழே வந்தார். அங்கு ஒரு போர்டு ஆங்கிலியா கார் நின்று கொண்டிருந்தது.

“இதை ஒட்டுங்கள் பார்க்கலாம்,” என்று கூறி அவரும் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். நான்காரை ஒட்டினேன். பீச்ரோடு வழியாக கார் சென்றது.

“பேஷ் பேஷ் பிரமாதமாக ஒட்டுகிறீர்களே” என்று கூறி ராயப்பேட்டை கபாலி பெட்ரோல் பங்கில் நிறையப் பெட்ரோல் போடச் சொல்லி அவர் கணக்கில் கையெழுத்துப் போட்டார். பிறகு அவர் வீட்டுக்குப் போனோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் விடைபெற்றேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். கல்கி என் கையில் மேற்படி கார் சாவியையும், ஆர்.சி. புத்தகத்தையும் கொடுத்து “இந்தக் காரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்குத்தான் வாங்கியிருக்கிறது” என்றார்.

எனக்கு எதுக்குக் கார், மேலும் இதற்குக் கொடுக்கக்கூடிய பணமும் என்னிடம் இல்லையே, என்றேன்.

கல்கி சிரித்துக் கொண்டே, பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காருக்குக் கொடுக்க வேண்டிய பணம் பூராவும் கொடுத்தாயிற்று. நீங்கள் தினமும் என்னைப் பார்க்க வரவேண்டியிருக்கிறது. எனக்கும் அன்றாடம் உங்களைப் பார்க்காவிட்டால் என்னவோ போலிருக்கிறது.