பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிவாஜி ரசிகர் மன்ற உதயம்

1950ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ் நாட்டில் பலவீனம் ஏற்பட்டது. அப்போது திரு. குமாரசாமி ராஜா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்.

திராவிட இயக்கத்தினர் செய்த ஆர்ப்பாட்டம், எதிர்ப்புப் பிரசாரம், இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் திணறிக் கொண்டிருந்தார்கள்.

நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிய காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் திராவிட இயக்கத்தினரால் பெரிதும் கேவலப்படுத்தப்பட்டார்கள். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பொதுக்கூட்டம் போட்டு திராவிட இயக்கத்தினர் நாக்கில் நரம்பில்லாமல் திட்டினார்கள்.

கதர் கட்டியவனைக் கண்டால் ஏளனம் செய்தார்கள்.

பதிலுக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் போட்டால் மக்கள் சேருவதில்லை. ஆனால் திராவிட இயக்கக் கூட்டங் களுக்கோ பெருவாரியாக மக்கள் கூடினார்கள். காங்கிரஸ் மந்திரிகளாக இருந்தவர்கள் காலத்திற்கேற்றபடி பேசத் தெரியாமல் செல்வாக்கிழந்து கொண்டு வந்தார்கள்.

திராவிட இயக்கத்தர்களோ, பேச்சில் வல்லவர்களாகவும், புதிய பாணியைக் கையாண்டு மக்களைத் தம் பக்கம் இழுக்கக்-