பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

87



மக்கள் கோபம் கொண்டு அரசாங்கக் கட்டிடங்களைத் தீக்கின்ரயாக்கினர். சிறைக் கதவை உடைத்து என்னை விடுதலைசெய்தனர். பலர் உயிர்த்தியாகம் செய்தனர். தலைமறைவாக இருந்தேன். தாய் தந்தையரை விடுவிக்க போலீசில் நான் சரணடைந்தேன்.

144 உத்தரவை மீறியது, மக்களை வன்முறைக்குத் தூண்டியது, போலீசாரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது, பஸ்ஸுக்கு தீ வைத்து சப்-கோர்ட்டைக் கொளுத்தியது, திருவாடானை மாஜிஸ்ட்ரேட் கோர்ட், தாசில்தார் ஆபீஸ், கெஜானா, போலீஸ் ஸ்டேஷன் சப்ஜெயில் இவைகளைக் கொளுத்தியது.

ஜெயிலிலிருந்து தப்பி ஓடியது. ஆயுதம் தாங்கிய சட்ட விரோதமான கூட்டத்தைக் கூட்டி வன்முறையில் இறங்கியது. துப்பாக்கி பிரயோகத்தில் பல பேர் சாவதற்குக் காரணமாக இருந்தது.

இப்படியாகப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி விசாரணை என்ற பேரில் பலநாள் இழுத்தடித்து கடைசியாக எனக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது.

இதை அறிந்த ராஜாஜி உடனே என் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பற்றி ஆராய்ந்து எனக்காக அப்பீல் செய்தார்கள். பெரிய வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நடத்தும்படி ஏற்பாடு செய்தார். வக்கீல்கள் பேசுவதற்குரிய ‘பாயிண்ட்களை’ ராஜாஜி, தன் கைப்பட எழுதிக் கொடுத்தார்.

அதில் அவர் சொல்லியிருந்தார். “144 தடை உத்தரவை மீறியதற்காகக் கைது செய்தார்கள். கைது செய்து தேவகோட்டையிலிருந்து 25 மைல் தூரத்திலுள்ள சப்-ஜெயிலில்