பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷等嘉

வார்கள், என் உறவே, ரத்தத்தைச் சூடேற்றும் உணர்ச்சியே, அந்த இடத்தில் இருந்தா வந்தாய்? உன்னுடைய ரதம் அங்கேயா இருக்கிறது? நடை தளர்ந்த நாள் செத்துவிட்டது: புதிய இரவு பூத்துவிட்டது! காட்டின் சூழ்நிலை கங்குலின் தோள்மீது தட்டியது! அப்போது இனப்புரியா பயம் ஒன்று எங்களுக்கு ஏற்பட்டது. இது இரவுக்குத் தரும் இனிதான விளக்கம். என் தாய் நாட்டுப் பண்பு அஞதை ஆசிரமத்தில் வாழ்கின்ற சிசுவல்ல. என்னுடைய லட்சியம் எல்லோரும் திருடி எடுத்துக்கொண்டு செல்கின்ற பொருளும் அல்ல. என்னுடைய நரம்புகள் இயற்கையாலானது. எனது தசை இயற்கையின் ஆதிக்கத்தால் சூடுபடுகிறது. எனது குருதி, என் தாய் கொடுத்த பால் மட்டுமல்ல; முதல் தாய் முதல் மகனுக்குக் கொடுத்த வீரப்பால் ஆகும். விபச்சாரியைத் துரங்கவைத்து, அவளுக்கும் ஒரு புதிய காலையைக் கொடுக் கின்ற,சூரியன் எனக்கு வேண்டாம். கண்ணகியைத் துயில் நீக்கி மதுரையைப் புடம் போட்டுத் தங்கமாக்கும் ஒரு புதிய நாளை உருவாக்கிடும் உன்னைப் போன்ற உதயசூரியனே தேவை. வானமென்ற கருவிலே உற்பத்தியான குழந்தை நீ, உன்னுடைய இனத்தைப் பற்றி பிண்டங்களின் உற்பத்தி யான குழந்தைகள் ஆராய்ச்சி செய்கின்றன. புதிதாப் பிறந்த காலை என்பவனின் கரம் அப்போது யூத்த ரோசா மலர் போல இருக்கிறது. அதுதான் உனக்குக் கை குலுக்குகிறது.

காலை எழுந்தது, துரக்கம் கலந்தன பூக்கள். பாவம் செய்யாத பறவைகள் பாடின. ஒன்றும் அறியாத குழந்தை கள் வீட்டில் இருக்கும் சிறிய விளக்கொளியைப் பார்த்து கண்களை உருட்டின. வைகறையில் தாய் முத்தமிட்டாள். முத்தத்தில் இருக்கின்ற குளிர்ச்சி மூன்று கோடி சந்திரனத் தோற்கடிக்கும். தாய்மை ை எடைபோட குழந்தை சிரித்தது. இரகசியமாகக் கிழக்கிலிருந்து எட்டிப் பார்த் தவனே? இதோ என் கைகளில் பூட்டியிருக்கும் விலங்கைப் பார்த்தாயா? சாக்ரடீஸ் போட்ட விலங்காக இருந்தாலும் சரி, ஏசு பிரான் யூட்டிய விலங்காக இருந்தாலும் சரி, உதய