罩要尖
வீசுகின்ற புயற் காற்றில் என் உடல் விளாம்பழத்தின் ஒட்டைப்போல் விரிசல் விடாதா?
வாழை மரத்தில் குத்திவ்ைத்த இரும்புக் காரைப்போல், துருப்பிடித்துப்போன என் எதிர் நாட்கள், வீரர்கள் கையில் இருக்கும் வாளேப் போல், பளபளப்பாகத் தோன்றும் நாள் எந்நாள்?
தத்துவ விளக்கத்திற்காக என்னைப் படைத்து விட்டு, நீ மேகக்குதிரை ஏறிப் போகின்ருய்! நான் சோகப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன்.
எனது வயல்கள் முட்டாள்களின் சிந்தனையைப்போல சாவியாகச்சாய்ந்து கிடக்கின்றன.
கதிர்மணிகளில் சப்பட்டை நெற்களே மிஞ்சியிருக் கின்றன.
இந்த லட்சணத்தில் எனக்கு வண்ணம் தோய்ந்த நீர்க் குமிழி உருவமா அம்மா!
அதோ கரும்இருளில் பேய்க்காற்று என்னை அடித்துச் செல்கின்றது!
வழிகாட்ட ஒரு மின்மினிப் பூச்சி கூட என்னுடன் வர வில்லையே!
பனித்துளிகளே உண்டு வாழும் வெட்டுக்கிளியின் இறக் கைப் படபடப்பைத்தவிர, வேறு குரலேதும் கேட்க வில்லையே!
நத்தையின் உதடுகளின், கிளிஞ்சல்கள் மேல் போகும் போது ஏற்படுகின்ற சப்தத்தைத் தவிர, நான் எதையும் கேட்க முடியவில்லையே!
கனவு கண்டு எழுந்த புருக்களின் முனகலேத் தவிர, வேறு எந்த அசரீரியும் கேட்கவில்லையே!