பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霊5認

உனது நாட்டுப் பற்றை ஒருத்தி நாடகமாடினுள்.

உனது அரசியல் பண்பைப் பற்றி ஒருவன் கவிதை ஆர்த்தான்:

உனது உறவைப்பற்றி ஒருவன் உருகினன்: அன்பின் உருவாகி ஆனந்தக் கண்ணிரைச் சொரிந்தான்!

அந்த புகழ் நெரிச்சலில் உன்னை எப்படியம்மா நான் வெளியே வந்து பார்ப்பது?

ஒரே மனத்திரள் தேனடையில் மொய்த்துக் கொண் டிருக்கும் தேனீக்கள் போல நானும் நெருங்கிக் கிடந்தேன். எப்படியாவது உன்னைப் பார்க்கவேண்டுமென்பதற்காக துணி துவைக்கும் தொழிலாளியின் கல்லருகே வந்தேன்.

அப்போது நீ வாய் திறந்தாய். கொட்டின முத்துக்கள்! சிதறின வைரங்கள்! எல்லாம் மரகதக் குப்பைகள்! மரகதக் குப்பைகள்:

ஒவ்வொரு கற்களும் ஒவ்வொரு பொருள் வண்ணத் தைக் காட்டி ஒளிர்ந்தன:

வந்தவன் ஒவ்வொருவனும் அந்த விலை மதிக்கமுடியாத மணிகளை மனக் கூடையில் வாரிக்கொண்டு போளுர்கள்:

எஞ்சியிருப்பது ஒரே ஒரு முத்து. அந்த முத்தை நாடி நான் நெருங்க ஆரம்பித்தேன். அது என்னருகிலேயே

இருந்தது:

அந்த முத்திலே, கண்ணியம்-கடமை-கட்டுப்பாடு என்ற சொல்லோவியங்கள் எழுதப்பட்டிருந்தன.

குமிழி உருவம் எடுத்தாலும் பரவாயில்லை. ஆனல் உன் பேரழகையும் புகழ் உரைகளையும் மக்கள் இதயமாரப் பேசி ரசித்து புகழ்பாடுவதை; இந்த அஃறினை உருவத்திலே கானும் பேறு பெற்றேனே! அது ஒன்றே இப்பிறவி பெற்றதின் பேருகக் கருதினேன்.