39
அதை மடமையென நான் கூறல் வேண்டுமோ! என்றது. பச்சைப் புல் வெளி:
ஆண்ட தமிழகத்திலே அளப்பரிய இலக்கியங்கள்? பூண்ட த மி ழ் க் கோலம் பூரிப்பாம்! காண்டல் கண்ணுக்கு இனிதென்ருர். அதன் தொனியைக் கேட்டால் காதுக்குத் தேன் என்ருர்,
இஃது உனதன்னை இருந்து ஆண்ட நிலம். அஃது இஞ் ஞான்று அவள் கையில் இல்லையடா!
வளத்தோடும்- வனப்போடும் வந்தோன் வாழ்கின்ருன்.
செங்களத்தில் செந்நீர் மடை திறந்த இந்நாட்டு மறவ ரெலாம் அடிமைத்தளை பூட்டி ஆங்காங்கு கிடக்கின்ருர்.
இந்த வளமிருந்தும் ஈடற்றத் தமிழ் மகனே நீ நொந்து நலிகின்ருய்!
ஏனப்பா நிலை கெட்டாய்? என்று தெருத்தோறும் முழக்கம் செய்கின்ற அண்ணன் மனத்திரையில் கருகா திருப்பது கன்னித் தமிழ் வளமன்ருே:
அந்த வளத்தின் வண்ணங்காட்டல் இந்தப் பச்சை நிற மன்ருே!
அந்நிலத்தின் சாயலினை; அன்னவரின் அழகுதமிழ் உரை யாடலிலே தென்னகத்தின் வீதி தோறும் மன்றத்தின் முழுமை உள்ளங்கள்-இல்லங்கள் பட்டி தொட்டிகளில் எல் லாம் பார்க்காமல் வந்து விட்டாயா!
அந்தக் குறைபாட்டில் அழகு பச்சையை நீ அழியும் மாயை என்று அறைந்தாயல்லவா என்றது? பச்சை!
மேலும் விளக்கம் தேவையோ என்று பச்சை நிறம் பரி வோடு கேட்டது?
ஆம் என்ருன் அந்தத் தஞ்சாவூர் பொம்மை அறிவுப் பசியால் அலைபவனல்லவா அவன்.
பச்சை மேலும். பேசிற்று! தம்பி, பாதை சரியாக இருக்கு மாளுல், அந்தப் பாதையிலே போகின்ற வாகனங்களை