பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒艇

மஞ்சள் சாமந்தியின் கவின்மிகு வ ன்னத்தைக் கண்டேன்!

எனக்கு முன்னே எண்ணற்ற மலர்கள் விரவிய அறிவுரை மணங்களே நுகர்ந்தனையோ என்றது!

தேவைத் திணிப்பாலே ஏங்கி நின்று, அவா பூர்த்தியாக முடியாமல் அவதிப்படும் மானிடனே!

தேங்கி நிற்கும்போது தெளிவற்ருேர் கூறும் வாசகங் களைக் கூறிவிட்டாய் நீ!

வாழையடி வாழையாக வந்து போகும் கோழை மனம் உனக்கும்:

அறிவின்மை ஏழைக்கு அதிகமன்ருே! தேவை முறியும் போது தெளிந்த அறிவுடையோரும் ஆவலுக்கு அருள் தாரா அனைத்தையும் மாயை என்பர்!

அஃதைப் பின்பற்றி நீயும் அலறுகிருய்! மஞ்சள் மங்கலத்தின் சின்னம்! அவ்வண்ணமின்றி பொங்கும் இன்பத்தைத் தொடங்கி யவர் எவருமில்லை!

முகடு மலையிடுக்கில் போய் மற்ையும் பகலவனின் ராஜ உடையின் பெயர் அந்தி!

அந்த நிறத்தைக் கூர்ந்து அறிந்தனையோ அஃதும் மஞ்சளே!

நாகரிக உலகில் பிணியிருக்கும் இடத்தை நல்லோர்க்குக் காட்டுதற்கு, மருத்துவ துறையினர் மஞ்சள் கொடி கட்டி, மருளைக் காட்டிடுவர்.

அஃதுமட்டுமோ! முக்கடல் உடை உடுத்தி, முப்பால் குறளேந்தி, திக்கெலாம் புகழ் மணம் பரப்பித் திருக்கோலம் பூண்டிருப்பது தென்னகத்து மண்!

அம்மண்ணின் தானத் தலைவனுக-தனிப் பெரும் மன்ன கை-சூழ வலம் வரும் சுந்தர அறிவாளன்?