பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

என்ன உன் பெயரென்று வெட்கம் தவழ்ந்த முகத்துடன் கேட்டேன்.

  • வேங்கைப் பூ ” என்றது. வேங்கைப் பூவா ? என்றேன் திகைப்போடு. ஆம், வேங்கைப் பூதான் என்று கூறியது.

蟒 ઈ. రడ్ద

g

வேங்கைப் பூ !

ன்ேன தம்பி வேங்கைப் பூ என்றதும் வெல வெலத்துப் போய் விட்டாயா ?

வேங்கை என்ற வார்த்தை என்ளுேடு சேர்ந்திருப்பதால் நான் புலி போலப் பாய்வேனே. என்று அஞ்சுகிருயா ?

என் பெயரைக் கேட்டதும் பின் ஏன் உன் உடலெலாம் உதறுகிறது ?

அட மாயை மனிதா என் பெயரைக் கண்டே புத்தி பேதலித்து விட்டாயே.

என் பெயர் வேங்கைப் பூ'தான். எனது வரலாறு தெரியுமா உனக்கு ?

கூறுகிறேன் கேள் என்றது வேங்கைப் பூ. என்னடா ஒவ்வொரு பூவும் நமது அறிவைச் சோதிக் கின்றனவே என்று வியந்தான் மாயையை நம்பிய மனிதன். உனது வரலாறு என்ன ? அதை உரை, கேட்கிறேன் என்ருன் அவன்.

வேங்கைப் பூ தனது மேதாவிலாசத்தைப் பூரிப்போடு புகன்றது.

தம்பி, தமிழ் இலக்கியங்களைப் படித்திருக்கிருயா நீ ?