5露
வீரத்தின் விளைநிலம் தமிழகம் விவேகத்தின் பிறப் பிடம். அமைதிக்கு வித்தகம்.
உலகச் சிறப்புக்கு உள்ளக் காரணங்கள் அனைத்தும் உருவான இடமே தமிழ் நிலம்தானே!
அந்த நிலத்திலே தோன்றிய மரம் நானல்லவா ? எனக் குரிய பெயரும் வேங்கைதான்ே !
எதிரியின் எலும்பைப் பொடியாக்கி, மாவாக்கி, வீரத்தாய் நிலத்திற்கு வீசும் தமிழர்களைப் போல வியந்து நிற்கிறேன்.
மானம் என்ற பண்பைப் பெற்ற தமிழகத்திலேதானே, மானத்தால் பிறந்து, மானத்தால் வளர்ந்து-மானத்தால் சாகிருர்கள் தமிழர்கள்.
மோன நிலையிலே, முகிழ்த்தத் தத்துவத்தால் முளைத்த இனம் தமிழ் இனம்.
ஞானஒளியால் ஞாலத்தில் உருவான விர இனம் தொல் புகழ் பூண்ட மரபு தமிழர் திருக்குலம்.
அந்த மண்ணிலே பிறந்த மரமல்லவா நான். எனக்கும் எங்கே போகும் அவை ?
எனக்குப் பெயர் வேங்கையாயிற்றே. நாளு கோழை, போல் குனிந்து கிடப்பேன் ?
அந்தத் தண்ணிரைப் பருகித்தானே என் உயிரணுக்கள் மூச்சு விடுகின்றன. எங்கே ஏகும் அந்த வீரப்பெருமூச்சுக்கள்: மறத்திற்கு இலக்கணமான புலியின் பெயரை ஒரு மரத் திற்குச் சூட்டி, மறத்தின் மணத்தை மேதினிக்குப் பரப்பிய நாடு தமிழ்நாடு தானே, தம்பி !
அத்தகைய மரத்திற்கு ஒரு ஆதிவரலாறு பெருமையோடு இருப்பதுதானே நியதி.
தமிழ்ப் புலவர்களும்-தமிழ் மக்களும் காரணமில்லாமல் எதையும் புகழ்ந்து பாட-பேச மாட்டார்கள் அல்லவா ? என்று கேட்டது வேங்கைப் பூ.