பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎盛

"தலை நாள் பூத்த பொன்னினர் ಡಿಕ್ಖಣಹ, ಅಹಿನಿ இஉேம் எமப்பூசல் ” என்று 'மலைபடுகடாம்’ எனும் நூலும் கூறுகிறது.

பாலையர் மட்டுமே வேங்கைப் பூவைக் கண்டு ஆரவார மிடவில்லை. வேழமே அஞ்சு மருண்டுள்ளது.

வேழம் ஒன்று ஒரு நாள் ஒரு வரிப்புலியோடு பொரு திற்ரும். -

அந்தப் புவியின் உகிருல் விளைந்த வடுக்களை எண்ணி கரி வீர வருத்தம் கொண்டதாம்.

அதே அத்தி, பிறகு அதே நினைவுடன் துயில் கொண்ட தாம்.

அப்போது கனவுஒன்று கண்டது கரி. புலியின் தோற்றம் அக் கனவிலே வந்ததாம்.

உடனே வேழம் துயிலை நீக்கியது. அதே சினத்தோடு பொங்கி எழுந்தது.

கனவிலே வந்த புலியைக் காணவில்லை. எதிரே புதிதாய் பூத்து மலர்ந்த வேங்கை மரத்தை அந்த வேழம் கண்டதாம். அந்த மரத்தை வரிப் புலியென மயங்கி அதன் எழில் தோற்றத்தை கை"யால் முறுக்கியது.

எழிலே வீழ்த்தியது. கழலால் துவைத்தது. அம்மரம்போல் பிறிதோர் மரம் காணுங்கால் களிறு நல் நோக்கு பாராது வெறுத்தே விலகிற்ரும்.

கலித்தொகையிலே வரும் கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு” என்ற 49-வது பாடல் இந்தக் கருத்தைக் கூறுகிறது.

களிறே வேங்கைப் பூ மலர்ச்சியைக் கண்டு புலியென நம்பிற்றென்ருல், காரிகையர் ஏன் ஏமப் பூசலிடார்! என்றது வேங்கைப் பூ.

முடிந்ததா பூவே, உன் முழு வரலாறு என்று மாயை மனிதன் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/55&oldid=564499" இலிருந்து மீள்விக்கப்பட்டது