பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎拿

அந்த அழகுமிகு அற்புதச் சோலைக்குள் அவன் பொற் காலமெனப் புகுத்தான்.

அவன் வருகையால் அகமகிழ்ந்தனள் இயற்கை:

மனக்கோலம் பூண்ட பாவையைப்போல குலுக்கென்று சிரித்தது:

சிசிப்புக்கள் அனைத்தும் தெறித்தோடி கடலின் சிப்பிக் குள் முத்தாய் உறங்கின.

அழகு புறப்பட்டு அறிவை வரவேற்றது!

பழக நினைத்த ஞானம் அவர் பாதத்திலே விழுந்து பணிந்தது:

அந்த மனிதன் கல்லாமையின் எதிரி!

கயமையின் பகைவன்! குணக்குன்றில் ஏற்றிய விளக்கு!

என்றெண்ணி வணங்கத் தலைப்பட்ட வாரணங்கள் எத்தனை?

முகிலின் தோரணங்கள் எத்தனை?

ஒளியால் நிழல் தடுக்க மாட்டாத திங்கள் குடை பிடிக்க ஓடி வந்தான்.

இத்துணைச் சிறப்புக்கு உருவாகி-தெளிவாகி-பொருளாகி மருள் நீக்கும் மருந்தாகி-அருளாகி நிற்கின்றன் அந்த மாமேதைக்

பல்லோர் போற்றும் அவனை, அவனி நல்லோனென வாழ்த்துப் பாடிற்று:

உடன் பிறந்த பாசத்தால் உந்தப்பட்டோர் அவரை அண்ணனென்றனர்!

கல்வி பசிகொண்ட ஏழைகள் அறிஞர் என்று கழறினர்!

கற்பனைக்குப் பொருள் தேடிக் காலமெலாம் காத்திருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/61&oldid=564505" இலிருந்து மீள்விக்கப்பட்டது