உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fi i

சொற்பல கிடைத்தாலும் சொர்ணச் சுரங்கமாய் கவிதை யாக்க

தலை குத்திக் கொள்ளும் சீத்தலைகள்-இல்லையென்ருல் கவிஞர்கள்-அவரைக் கவிதைக்கு மூலமென்றனர்!

அத்தகைய அண்ணனை நானென்ன நவின்று அழைப்பது? அன்னையின் அணைப்பறியேன். தந்தையின் இரக்கத்தை நான் என்ருே இற்ருெழித்தேன்; நீருெரீந்த மீனென நிலச் சூட்டால் தவிக்கின்றேன்: காருெரீந்த கூழெனப் பார்த்திருந்தேன் ககனத்தை! வேரறுந்த பாட்டாக விளங்குகின்ற எனக்கெல்லாம், தாயாய்-தந்தையாய்-தனிப் பெரும் தெய்வமாய்-வாழ்வுக்கு தாயாய் அவர் இருக்கின்ருர்!

அவரின் தாயுள்ளம் எனக்காகி, இந்த சேயுள்ளம் விளங்கு வதற்கு நாளெலாம் வேண்டுகிறேன்.

நல்லுறக்க நாட்டினிலும், அவிழும் கனவெலாம் அவரே விளக்கானுர்!

அந் நல்லோன் உளம் நினைந்து நான் இவ்வாறு பாடிக் களிக்கின்றேன்.

தாயே!

கலைஞர்களது கற்பனைத் திறல்ை யானைத் தந்தத்தில் பொன் சிற்பமானவளே!

உன்னை மூன்ரும் பிறையிலே நான் காண்கிறேன். முழு நிலவில்-உன்னிடத்தில் களங்கம் இருப்பதாக என் உபதேசம் இயம்புகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/62&oldid=564506" இலிருந்து மீள்விக்கப்பட்டது