உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辖芝

எனவே, பிறையில் உன் இளஞ் சிரிப்பைக் காண்கிறேன்

அன்னும், என்னை மலராகப்படைக்கும் போது, எதைக்

பூமியிலே போட்டு புழுதியிலே மூடினுயல்லவா என்ன? எனக்கு அப்போது நீ கொடுத்த ஆகாரம்தான் என்ன?

துனரல் எரு நாள் துர் றிற்று!

நிலத்தின் பிடிப்பிலிருந்து கொஞ்சம் நழுவினேன்!

நான் முளைத்து விட்டேன்! செடி பாகி நீண்ட காலமிருந் தேன்.

வைகறை கிழக்கில் முளைத்தது!

இலக்கு நடுவில் நான் சிறு துளியாக இருந்தேன்!

வேர் வழி எனக்கு உணவு தந்தாய்!

கார்வழி வளி தந்தாய்! மொட்டானேன் நான்! பட்டம் பகல் பறந்தது: தட்ட நடு நிசியில் நீ வந்தாய்! தொட்டாய்! தொட்ட இடத்தில் மணம் தந்தாய்! கட்டுக் குலைந்தன இதழ்ச் சுருக்கம்! பட்டுத் தெரித்தது சிரிப்பு: சிரித்துக் கொண்டே

தென்றலாய் நீ என்னை முத்தமிட்டாய்!

சூறையால் பிறகு சுருண்டு விழுந்தேன்! விழுந்த இடம் எது தெரியுமா? உன் மடி தானே மாதா:

இதிலிருந்து, களங்கமற்ற உள்ளங்கள் உன் ம்டியில்தான் விழுந்து உறங்க முடிகிறதென்று அறிய முடிகிறதல்லவா அம்மா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/63&oldid=564507" இலிருந்து மீள்விக்கப்பட்டது