பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6;

அதற்கு நான் அடிமையம் அம்ம: இறகில்லா விட்டால் சிறகு இல்லை! சிறகு இல்லாவிட்டால் கொக்கே இல்லை! ஆயிரம் இறகாலானது சிறகு! இரண்டு சிறகாலானது கொக்கு!

சிறகைத்தான் கொக்கும் கவனிக்கிறது! இறகைப் பற்றி நினைப்பதே இல்லை.

இறகு ஒன்று உதிர்ந்தாலும் பரவாயில்லை என்று சிறகு நினைக்கிறது!

உதிர்ந்த இறகோ சகதியில் அழுகிறது!

இறகு இருந்த இடத்தை இன்னென்று நிரப்ப முடியா தல்லவா?

இறகுகள் இவ்வாறு உதிர்ந்தால் பிறகு கொக்கு பறக்க முடியாதல்லவா?

கர்வம் கூடாது தாயே கொக்குக்கு! நான் ஆட்டுவதாலேயே இறகாய் இருக்கின்ருய் என்ருல்” இழிந்த இடத்துக்கு என்னை அனுப்பாதே அம்மா!

ஒருநாள் கொக்கு பறந்தது! என்பக்கத்திலே இருந்த இறகு ஒன்று உதிர்ந்து விட்டது!

அளவுக்கு மீறிய உயரத்தில் சென்றது கொக்கு! உதிர்ந்த இறகை அது உதாசீனம் செய்துவிட்டது! தருணம் பார்த்துக்கொண்டிருந்த புயல் உதிர்ந்த இறகு இருந்த இடத்திலே நுழைய ஆரம்பித்து விட்டது!

சிறகுகள் மேலும் சில உதிர ஆரம்பித்தன!

பறக்க முடியாமல் கொக்கு வானத்தில் தள்ளாடியது!

நான் அப்போது அந்தக் கொக்கைப் பார்த்து நவின்றேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/66&oldid=564510" இலிருந்து மீள்விக்கப்பட்டது