பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雷伊

நிலவற்ற அந்த நீல வானத்தில் நித்திலங்கள் கூட்டம் கூட்டமாக இருந்து பூமியை உற்றுநோக்கிக்கொண்டிருந்தன!

'இம்மென்ற ஓசையோடு திக்குகள் எட்டும் அமைதி யோடு கூடி மோன விரதத்தில் ஆழ்ந்திருந்த நேரம்!

அதோ ஒரு கல் தொலைவில் வாழ்க்கையின் வடிவத்தைச் காணமுடியாதவர்கள்-மரணவேக்காட்டில் நொந்து போனவர்கள்-உடலங்களைச் சுடுகாட்டுத் தீப் பிழம்பு சாம்பலாக்கிக் கொண்டிருந்தது:

ஒய்ந்துபோன ஜீவன் வன்னிக் கொடிக்குத் தன்னுடைய கூட்டை இரையாக்கி-அது எரிகின்ற விதத்தைக் கலை புணர்ச்சியோடு கண்டுகொண்டிருந்தது.

மேலே நிர்மலமான வானம் அதனைத் தாவிப் பிடித்துக் கொண்டிருந்தது-இறந்தவனின் ஆசைப் புகை!

மனிதனுடைய பிறப்பைப் பற்றி மகிழ்ச்சிக் கொள்ளு கின்ற இந்த உலகம்-அவன் இறந்த பிறகு ஏன் மெளனம் சாதிக்கிறதென்ற தத்துவங்களைக் கேட்டால் அது தனக்குரிய விக்ரகங்களைக் காட்டுகிறது.

என்னுடைய சிந்தனை வளையங்கள் இந்த சூழ்நிலைக் கிடையில் மிகஅமைதியான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனுல் அதிலுள்ள, ஒரு அழுத்தமான வளையம் மட்டும் வான நோக்கி அறுந்து போகின்ற பட்டத்தைப் போல வேகமாக ஒடிக்கொண்டிருந்தது.

இப்போது இரண்டு மேகக் குவியல்கள் எதிரும் புதிருமாகத் தெற்கிலிருந்தும்-வடக்கிலிருந்தும் குவிந்து கொண்டிருக்கின்றன.

அதோ அவை ஒன்றை ஒன்று கவ்விக் கொள்கின்றன.

தப்பித்துப்போன எனது சிந்தனை வளையம் அவை: பிணைப்பை வெட்டி வீழ்த்திக் கொண்டே மேல் நோக்கிச் செல்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/71&oldid=564515" இலிருந்து மீள்விக்கப்பட்டது