பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


பிறந்த மேனியாக முன் இரவில் தரிசனம் தந்த மஹேஸ்வரியின் உருவப் பொலிவைத் துணைகொண்டு, மாடிக்கு ஒடிஞன் காளத்திகாதன். “ மஹறி!...மஹறி ‘ என்று கூப்பாடு போட்டான்.

மஹேஸ்வரி படுத்துக் கிடக்தவள் எழுந்து கின் ருள். தலைமுடி அவிழ்ந்து முடியப் பெற்றிருந்தது. எளிமை மிக்க உடைகள் மேனியைத் தழுவியிருந்தன. அணிகலன்களைத் துறந்துவிட்டிருந்தாள் அவள் கெற்றிப் பொட்டு துய்மைக்குப் பிரதிநிதித்வம் பேசி யது ; அவளது மாங்கல்ய பாக்கியத்தின் பெருமையில் பங்கேற்றது. சிவப்புத் தோலில் அழகு பேசியது. -

மஹேஸ்வரியையே தொடுத்த கண் விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனது உள்ளோலம் புது உருவம் கொண்டது உணர்வின் வெறிக்கோலம் அழிந்தது. பலஹினமாக இன்ப நுகர்ச்சிக் குறிப்புகளுள் தவித்த உள்ளம் படிப்படி யாகச் சமன் நிலைபெற முடிந்தது. தலைமுடி பம்பை யாகப் பறக்க, முகப்பொலிவில் வேர்வை முத்துக்கள் உடைந்து புரள, உள்ளம் இழந்த நிலையைச் சிறுக சிறுக மீட்டுக்கொண்ட பாவனையில், அவனுடைய மேனியின் நடுக்கமும் குறைந்து வந்து, உடலாட்டம் கின்றது. சட்டையைத் தூக்கிவிட்டு, வெளிக்காற்றை உடலில்பட விட்டான் அவன்; கண்ணிரைத் துடைத் துக் கொண்டான். மீண்டும் மஹேஸ்வரியைப் பார்வையிட்டான். கோயிலின் க ரு வ ைற யி ல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அம்பிகையின் கினைவை அவளது உருவம் எடுத்துச் சொன்னது அந்த அமைதி தனி; அந்தக் கம்பீரம் தனி; அந்த வீரம் தனி ; அந்த அழகு தனி ; அந்தக் கனிவே தனி: அந்தக் கனவே தனி ; அந்தக் கதையே தனி !