பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே நெஞ்சு களம்கொண்ட நோய் !’

டம்பப் பையின் முகத்தில்தான் எடுத்த எடுப்பில் கண் விழித்தாள்மஹேஸ்வரி. அப்பொழுது, காலைக் கதிரவனின் இளங்கதிர்கள் சூடேற்றிக் கொண்டிருந் தன. தியேட்டரின் வெளி வாசற் கதவைத் திறந்து விட்டதும், ரசிக மகா ஜனங்கள் முண்டி முறித்து உள்ளே பாய்ந்து செல்வார்கள் அல்லவா ? அந்த அளவில்தான், அரைகுறையாகத் திறந்து விடப் பட்டிருந்த படுக்கையறையின் ஜன்னல் கதவுகளின் ஊடாகக் கதிரொளி படர்ந்து பாய்ந்து வழிந்தது. விசை வளையம் பொருத்தப்பட்டிருந்த பட்டுமெத்தை யில் பதிந்த பட்டுமேனியைக் கிளப்பினுள் ; சோம்பல் முறித்தாள். கழுவி விழுந்த மார்பகத் துணியை வழுவில்லாமல் செம்மைப் படுத்தினுள்; தலைமாட்டில் தெரிந்த நிலைக்கண்ணுடியில் முகம் தெரிந்தது. மோதிர