பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


தீக்கங்கு பட்ட பூவை ஒத்த கிலேயில் இருந்த வளுக்கு, மலர்மனம் சுமந்துவரும் இளக்தென்றல் பட்டாற்போன்று ஓர் இதமான உள்ளுணர்வு வெண் சாமரம் வீசிற்று. இங்கினைவோடு, இதழ்க் கரையில் குறுஞ்சிரிப்பை ஒதுக்கிவிட்டு, வாசற்புறத்தே திருஷ்டி செலுத்திய போழ்தில், வெறும் கார்மட்டிலுமே திரும்பிக் கொண்டிருந்ததைக் கண்டாள். வேதனை அவளுக்கு உடைமை பூண்ட உயிர்கிலேயை அரிக்கத் தொடங்கியது.

தெய்வயானைக்குத் திருமணம் ஆயிற்றே : மஹேஸ்வரி ஒடியாடி அலுவல்கள் புரிந்தாள். வதுவை மடல் தயாரிப்பதிலிருந்து மனமேடை அமைப்பது வரை சகலமான வேலைகளையும் தன் தலையிலேயே போட்டுக் கொண்டாள் அவள். அதனல் தான் போலும், காழிக்கு ஒருமுறை அவளுடைய குழல் கற்றைகள் அவிழ்ந்து விழுந்தன ; அவற்றை அவள் அள்ளி முடிந்துகொள்ளவும் மறக்கவில்லை. மேடு அமைத்துப் பள்ளம் பறித்த மார்பகத்தில் தவழ்ந்த பட்டுப் புடவையைச் செம்மை செய்து தன் பெண் ைம ையக் கட்டி க் காத்துக்கொள்ளவும் அவளது பூங்கரங்கள் தப்பவில்லை. எண்ணங்கள் சமைத்த நெற்றிக் கோட்டையை விரக் தி யும் விரகவேதனையும் முற்றுகையிடும் போதெல்லாம், அவள் தன்னுடைய அழியாத தன்னம்பிக்கையையும் ஆழ்ந்த நெஞ்சுப் பலத்தையும் ஏவி வெற்றிக் கொடி காட்டிக் கொண்டே யிருந்தாள். அதனுலேதான், தன்இன மறந்து, கில்லாமல் நிலைக்காமல் திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவளால் செய்ய முடிந்தது. உன் காதல் தொடர் கதை மங்களம் பெருமல் அப்படியே அந்தரத் தில் நிற்கிறதே, மஹி : என்று நினைவூட்டியது

4 -