பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


செய்தது அவள் உள்ளம், எண்னும் சுதந்திரத்திற்கு முதல் பாத்தியதை இந்த மனத்திற்குத்தானே உண்டு ? ஆகவே தான், அது தன் பாட்டில் நினைவைச் சொடுக் கிற்று. ஆணுல், தொலைபேசிக் கருவி சொடுக்கிய சாட்டை அவளை மருளச் செய்து விட்டதே ?

புது தில்லியிலிருந்து காந்திராமன்தான் அப்படி அவசரம் அவசரமாக அழைத்திருந்தான். இருக்காதா பின்னே? அவன் அவசரம் அவனுக்குத் தெரியும். காதல் என்பதுகூட ஓர் அவசரத் தேவைதானே ? ஒரு சிலர், காதலை ஒரு விபத்து என்றுகூட குற்றம் சாட்டு கிறார்களே ? எந்தப் பட்டனம் கொள்ளை போனலும் போகட்டும் என்றுதான், மஹேஸ்வரியுடன் பேச விழைந்தான் காந்திராமன். எண்ணத்தில் தோல்வியும், தோல்வியில் வேதனையும், வேதனையில் மனத்தளர்ச்சி யும் நிலைகிற்க, கடந்தாள் அவள். நான்தான் உன் காந்திராமன் பேசுறேன் ! என்று பாரதத் தலைநகரின் குரல் தமிழகத்தின் தலைநகரில் ஒலித்ததுமே,அவளுக்கு காடி தளர்ந்து போயிற்று. என் காந்திராமனுமே ? மண்ணுங்கட்டி ! என்று சலித்துக் கொண்டவளாக, மனச்சல்லடை சலித்துக் கொட்டிய சொற்களைக் கோந்து போட்டு ஒட்டி ஒப்புவித்தாள் அவள்.

சொன்னுள் இப்படி :

மிஸ்டர் காந்திராமன், நான் முன்பு ஒருமுறை உங்களுக்குப் போட்டிருந்த கடிதத்தில் சொல்லியிருந்த தைத்தான் இப்போதும் உங்களிடம் திருப்பிச் சொல்ல வேண்டியவளாகிறேன். கல்யாணச் சந்தையில் பெண் மாப்பிள்ளைதான் கிடைப்பார்களே தவிர, காதல் கிடைக்கமாட்டாது. எல்லோரும் பேசுவது மாதிரி,