பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


கடந்தது. புடமிட்ட சொக்கத் தங்கக் கட்டி யாகவே வேதநாயகம் தோன்றினர். தவறுபட்ட வழிகளிலே தங்கத் துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது அவதூறு என்பது புலனுகியது.

“ஐயா, எனக்கென சேமித்துவைத்துச் சென்ற என் தகப்பனுர் அவர்களின் சொத்து, இன்னும் ஒரு தலை முறைக்குக் கானும். எனக்கு இருப்பது ஒரே செல்வம். அதுவும் பெண் மகவு. அவள் கல்லபடியாக வாழ வேண்டுமென்பதே என் லட்சியம். நல்ல முறையில் திரிகரண சுத்தியாகச் சம்பாதிக்கப்படுகிற பணம்தான் வம்சத்துக்கும் கல்லவிதமாகப் பயன்பட முடியும். பட்டினத்து அடிகளாரைப் பற்றி உங்களுக்குத் தெரிக் திருக்க நியாயம் இல்லை. ஒரு பாட்டு வருகிறது. காம் மண்ணில் பிறக்கும்போது நம்மோடு எதையும் கொண்டு வந்ததில்லை. அதேபோல, இறக்கிற சமயத் திலும் நாம் நம்முடன் எதையும் கொண்டு செல்லப் போவது கிடையாது. இடை நடுவிலே குறிக்கப்படும் இந்தச் சேமகிதியை சிவன் தந்தது என்று கருதி, கல்ல வழிகளுக்கு இயன்ற அளவில் செலவிடுவதே தர்ம மாகும். இதுதான் அடிகளின் பாட்டு. இப்பாடலை நீங்கள் நம்புவதானால், இந்த ஏழையையும் நம்புங்கள்! “ என்று உரை மொழிந்து, முற்றுப்புள்ளி வைத்தார் வேதகாயகம். . . - .

அசைவற்று கின்றார், சட்டத்தின் பிரதிநிதி. துரய ள்ளத்துக்குக் கண்ணிர் உண்டென்பதை அவர்

கண்டு கொண்டார். அவருடைய கேத்திரங்களும் கலங்கத் தொடங்கின. W - - -

மஹேஸ்வரி சிறுமி பாவாடை உடுத்து விரும்

தாள். ‘என்னுங்க ஸ்ார், எங்க அப்பாவை இப்பவானும்