உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 தானமும் பேசுகின்றனர். எது வாய்மை என்ற கேள் வியில் இறங்கிவிட்டனர். இராமனுக்கு முன்னே கொடுத்து முறைமாற்றித் தம்பிக்குப் பின்னே கொடுத்தால் மெய் பிழை யாதோ என்று கேட்கின்றனர். கைகேயி: எது நிற்கிறது? இருந்து பார்த்தால்போகிறது, கூனி: நம்மை யாரும் கலக்க முடியாது. கணிகை என்று என்னைக் கணக்கிட்டது பெரிதல்ல. மண்மகள் திருமகள் எல்லோரையும் வஞ்சம் தீர்க்கின்றனர், பொது மக்கள். இராமனை அடைந்த மண்மகள் இப்பொழுது எப்படி மற்றொருவரை அடைவாள். இராமன் பின் சீதை செல்கிறாள். அவளோடு திரு மகள் போக முடியாதா? அந்தத் திருமகள் எப் படித்தான் பரதனை அடைகிறாள் பார்க்கலாம். என்று மண்ணையும் செல்வத்தையும் பொது மகளாகப் பேசத் தொடங்கிவிட்டனர். இந்தப் பொதுமக்கள் கன்னா பின்னா வென்று பேசு கிறார்களாமே. அவன் மறைந்தால் தான் என் மக னுக்கு இந்த நாட்டில் பெருமை கிடைக்கும். உன் மகனுக்குப் பெருமை கிடைத்தால்தான் உங்களுக்குக் கிடைக்கும். கைகேயி: அப்பொழுதுதான் கூனி: எனக்குப் பெருமை கிடைக்கும். நீ கைகேயி நிமிர்ந்து வாழலாம். கூனி: கூனியும் நிமிர்ந்து வாழலாம். நம் மகன் பரதன் வரட்டும் எல்லாம். கைகேயி சரியாகப் போகும். அவனுக்குத்தானே நான் இவ் கூனி: வளவும். அவ்வளவும் அவனுக்குத்தான்.