உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கைகேயி: தற்கொலை முடிவு. கூனி: தேவையில்லை. இந்த உலகத்தை அழிக்கப் பிறந்த நாம் கைகேயி ஆக்கப் பிறக்கவில்லை. கேகயன் மகள் உறுதி குலைய மாட்டாள். காட்சி : 24 பரதன், கோசலை, வசிட்டர் பரதன்: தாயே என்னை மன்னிக்க வேண்டும். கோசலை: எதற்கு? பரதன்: என் அன்னை வயிற்றில் பிறந்தமைக்கு. கோசலை: கேகயன் மகள் இழைத்த வஞ்சகம் உனக்குத் தெரிந்ததுதானே. பரதன்: தெரிந்துதான் வருந்துகிறேன். நான் பிறந்த தால்தான் இராமன் துறந்தான்; மன்னன் மறைந்தான். இந்தப் பழிக்கு நான், ஆளாகி நிற்கின்றேன். வழிக்கு ஏதாவது வந்துதான் ஆகவேண்டும். கோசலை: மன்னனை இழந்த நாங்கள் மக்களையும் அனுப்பி அழிகின்றோம். பரதன்: இனி நானும் போக விடை கேட்க வந்துள்ளேன். கோசலை: மன்னர் மன்னன் நீ. மணிமகுடம் சூட வேண்டும். இந்தக் கவலையெல்லாம் மறக்க நீ, மணிமகுடம் சூட வேண்டும். இது மன்னனின் ஆணை. பரதன்: ஆணை அது வாயின் அதை மாற்றும் உரிமையும் என்னிடம் உள்ளது.கொடுத்த