உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 போகிறேன். என் அன்னை செய்த பழி அகல நான்தான் புண்ணிய நதிகள் ஆட வேண்டும். ஏழிரண்டு ஆண்டு தவம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் பழி தீரவே தீராது. நான் ஒரு வன் காடு சென்று மூவரை வீடு திரும்பச் செய் கிறேன். இலக்குவன் செய்த பேறு நான் செய்ய வில்லையா! அவன் வில்லைச் சுமக்க நிற்கிறான். நான் பழியைச் சுமக்க இருக்கிறேன். வசிட்டர்: கேகயன் மகள் என்றே இந்த நாட்டில் உன் பரதன்: வசிட்டர்: பரதன்: அன்னையை அனைவரும் பிரித்துப் பேசிவிட் டார்கள். அவள் சொந்தப்பெயரை மாற்றிக் கைகேயி என்றே கூறத் தொடங்கிவிட்டார்கள். கேகயன் மடந்தை என்ற பெயரை மன்னன் மறந்ததே இல்லை. அதே பெயரால் தான் அவளை விளித்தான். அந்த உணர்வு அவளுக்குத் தலைக்கேறி விட்டது. அவள் சாகவில்லை. மற்றவர்களை அழிக்கத் தொடங்கி விட்டாள். தாய்க்குலமே இந்தத் தவற்றைத்தான் செய்கிறது; தான் பிறந்த அகம் செழிக்க வேண்டும் என்று நினைக்கிறது. தன் வயிற்றுமகன் வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். பெண் உள்ளம் அதுதான். இந்த இரண்டு உணர்வுகள் சேர்ந்தவள்தான் ஒரு பெண். மண மாவதற்கு முன் தாயகம். ஆனபிறகும் அந்தப் பெருமை நிலைத்து நிற்கிறது. மக்கள் பிறந்தும் மக்கள் வாழ வேண்டும் என்ற காதல். இந்த இரண்டு உணர்வுகளும் ஒரு சேர நின்றுவிட்டன அவளுக்கு. நீங்கள் எல்லாம் தடுத்து. வசிட்டர். அடுத்துக் கேட்டோம். கேட்கவில்லை. இப்