உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அனு: <9/g)/: பொறியாவது நெறியாவது வஞ்சனை அரக்கரை அஞ்சாமல் எதிர்ப்போம்! கவலற்க அதோ பார் ஒர் அணங்கு அவள்தான் சீதையாக இருக்க வேண்டும். பொற்சடையினாள் அமைதியான தவக்கோலத்தோடு விளங்குகின்றாள். தேவியே இவள் ஆகா! இவளா இராமனின் மனைவி? இருக்காது. முத்துமாலை, அக்குவடம் அத்தனையும் அணிந்து ஒரு தவசியாகக் காட்சியளிக்கின்றாளே! கேட்டுத்தான் பார்ப்போம். சுயம்பிரபை: (கண்விழித்து) துன்னரிய இப்பொன்னகரில் எப் egosg91: சுயம்: egos.golf: படி வந்தீர்? வந்தது ஏன்? நீவிர் யாவிர்? உரை செய்க! வேதனை அரக்கர் ஒரு மாயையை விளைவித்துச் சீதையை ஒளித்தனர். அவளைத் தேடித் திரிகின்றோம். தாங்கள்! நான் சீதையல்ல. சுயம்பிரபை என்பார்கள். தாங்கள். இராம தூதர்களா? ஆகா! என் தவம் இப்பொழுது நிறைவேறுகிறது. உங்கள் வரவு நல்வரவாகுக. இந்திரன் சாபத்தால் நான் இந்நகரில் காவல் புரி கின்றேன். என் தோழி ஒருத்திக்கு உதவி செய்து அவள் காதலனோடு இங்கு வாழவைத்தேன். இது தான் நான் செய்த குற்றம். "இந்நகரிலேயே கிடக்க" என்று இந்திரன் சாபமிட்டான். "இராம னின் தூதுவராக வானரர் வருவர். அப்பொழுதுதான் சாப விமோசனம்" என்று கூறினான். அதன்படி நீவி ரும் வந்தீர். வாருங்கள், உணவு அருந்துங்கள். அனு மன் ஆற்றலால்தான் இப்பிலம் பிளவு படும். நானும் வெளியேறும் காலம் வரும். சுயம்பிரபையா தாங்கள்! இதோ இந்தப் பிலத்தை இப்பொழுதே பிளக்கின்றேன். கவலை வேண்டாம்.