உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கூனி: கோசலைக்கு கைகேயி பரதன் வளர்ப்புமகன். இராமன் பிறப்புமகன். கூனி: இதெல்லாம் சூழ்ச்சி! உன்னை ஏமாற்றவே இந் தச் சூழ்ச்சி இராமன் உன்பால் காட்டும் பாசம் எல்லாம் நீ அவன் பட்டத்துக்கு வருவதைத் தடுக்காமல் இருக்கவே. கைகேயி: அக்கம் பக்கம் கூனி: கேட்டால் சிரிப்பர் நீ ஒர் ஏமாளி என்று. பரதனை ஏன் உன் தாய்வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் தெரியுமா? கைகேயி: தெரியும், பாட்டியையும் பாட்டனையும் பார்க் கச் சென்றிருக்கின்றான். கூனி: அதுதான் இல்லை. இராமனுக்குப் பட்டம் சூட்ட அவன் அருகில் இருந்தால் உனக்கு அவன் மீது பாசம் வரும்; திரை விலகும். கைகேயி திரை! இது என்ன புதுச் சொல். நாடகச் சொல்லாக இருக்கிறதே. கூனி: அதை விலக்கிக் காட்டவே வந்தேன். நீ யார்? கைகேயி: இதென்ன வேதாந்த விசாரணையாக இருக்கிறது; நான் யார்? என் உள்ளம் யார்? இதெல்லாம் வய தானவர்களுக்குப் பொழுதுபோக்கு. கூனி: தெரிந்த பதில்தான். ஆனால் சொல்லுவதில் உன் உள்ளம். கைகேயி: உள்ளம் எது? உள்ளத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறாய். சரி மீண்டும் கேள். அவர் வரு கிற வரையில் பொழுது போக்காகவும் இருக்கும்.