உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 கூனி : நீ யார்? கைகேயி: நான் யார்? தசரதனின் மனைவி. கூனி: தசரதனின் மனைவி. பழகிப்போன பதில் புளித்துப் போன செய்தி. நீ ஒருத்திதானா மனைவி? கைகேயி: நாங்கள் மூவர் அவர் மனைவியர். கூனி: அதில் உனக்கு என்ன சிறப்பு இருக்கிறது? கைகேயி சிறப்பு; மூவரில் ஒருத்தி, அதுதான் சிறப்பு. கூனி: இல்லை, நீ கேகயன் மகள். அதுதான் உன் தனிச்சிறப்பு. கைகேயி: அதனால்தான் என்னைக் கைகேயி என்று கூப் பிடுகிறார்கள். கூனி: உன் பெயரை நீ நிலைநாட்டவேண்டும். கேகயன் மகள் நீ அதை உலகுக்குக் காட்டவேண்டும்; அதிலேதான் உன் புகழ் இருக்கிறது. கைகேயி: புகழ், அதை நிலைநாட்டினால் உலகம் இகழுமே கூனி: உலகம் நீ இந்த வாய்ப்பை இழந்தால்தான் இகழும்; நாளைக்கு இராமன் அரசன் என்றால் சீதைக்குப் பெருமை கோசலைக்குப் பெருமை: நீ அவர்களுக்கு அடிமை. கைகேயி: யாருக்கு யார் அடிமை? நீ சொல்வது புதுமை யாக இருக்கிறது. கூனி : எதையும் நீயாக உரிமையாக எடுத்துக் கொடுக்க முடியாது; கைகேயி: அப்புறம் இவ்வளவுதானே! கேட்டுத்தான் கொடுத்தால் போகிறது. கூனி: இதை நினைத்துப்பார் சனகன் உன் தந்தை