உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கேகயன் மீது கொண்ட பகையை ஏன் முடிக் காமல் இருக்கிறான்? தன் மருமகன் ஆட்சிக்கு வந்தால், சனகன் உடனே உன் தந்தையின் மீது படையெடுப்பான். இது அரசியல் மாற்றம். உனக் குப் பெரும் ஏமாற்றம். அப்பொழுது. கைகேயி: அப்பொழுது? கூனி: உன் நிலை? உன் தந்தைக்கு உதவமுடியாத நிலை; அழுது அழுது சாக வேண்டும். கேகயன் மகள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும். கைகேயி: வெட்கப் படவேண்டும் - எதற்கு? கூனி: உன் சிந்தனைக்கு போயும் போயும் ஒரு கிழ வனுக்கு மூன்றாம் தாரமாக, அதாவது கடைசி தாரமாக அமைந்தாயே அதற்கு. கைகேயி நா அடக்கிப்பேசு! நான் மன்னனின் மனைவி! கூனி: இன்பத்துக்கு கொஞ்சலுக்கு உரிமைக்கு அல்ல. கைகேயி நான் இன்பத்துக்கா! உரிமை. கூனி: உன் மனம்தான் சொல்லவேண்டும். இளைய ஒருத்தியை அவன் இன்பத்துக்குப் பலியாக்கிக் கொண்டான். இதுதான் உண்மை. கைகேயி சிந்தனையைத் துண்டி விடுகிறாய்! கூனி: தூண்டினால்தான் சுடர்விளக்கு எரியும், இராம னுக்குப் பிறகு ஆட்சி. கைகேயி: அது யாருக்கு என்றா கேட்கிறாய்? அப் பொழுது பார்த்துக் கொண்டால் போகிறது. கூனி: அவன் மக்களுக்கு கோசலையின் பேரன்