உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தேவிகுளம், பீர்மேடு - சர்ச்சைகுரிய பிரச்சனை, என்று அவர்களே பலமுறை சொல்லியிருக்கிறார்கள். எனவே, அதைத் தவிர்த்து எல்லோரும் ஒரு மன தாய் அங்கீகரிக்கக் கூடிய தன்மை பெற்றிருக்கும் சென்னைக்கு ' தமிழ்நாடு " எனப் பெயரிடும் விஷயத் திலும் சட்டசபைக் காங்கிரஸ் கட்சி தன்னுடைய குருட்டுப் போக்கை வெளிப்படுத்திக் கொண்டிருக் கிறது. பெயர் மாற்றத்துக்கு இப்போது அவசியமில்லை யாம்! - சொல்லியிருக்கிறார் காமராசர். தன்னுடைய கட்சிப் பிரிவிற்குத் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி ” என்று பெயர் வைத்துக் கொண் டிருப்பவர் - தன்னைத் ' தமிழ் நாட்டு நேரு " என்று தொண் டர்கள் கூறுவதைக் காதாரக் கேட்டு மகிழ்பவர் அந்தக் காமராசர் தான் சென்னையைத் 'தமிழ் நாடு' என்று அழைப்பதற்குத் தடைபோடுகிறார். - தமிழ்நாடு - இந்தப் பெயரிலே என்ன குறை கண்டுவிட்டார் காமராசர் ? - "தமிழ்-தமிழன் - தமிழ்நாடு "என்று சொல்ல ஏன் அச்சப்படுகிறார்? - அந்தப் பச்சைத் தமிழர்? - அவர் கூறும் நொண்டிக் காரணத்தையும் கேளுங்கள். சென்னை (மெட்ராஸ்) என்ற பெயர் நாடு முழு மைக்கும் மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/160&oldid=1703709" இலிருந்து மீள்விக்கப்பட்டது