உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கடாரம் கொண்டவன் - ஈழத்தை வென்றவன் வியாபாரப் பெருக்கத்தால் யவனத்தை அணைத்த வன் - என்று சரித்திரம் படிக்கும் ஒவ்வொரு நேரத் - திலும் தமிழ் - தமிழகம் - - தமிழ்நாடு - என்ற வார்த்தைகள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து இது கூடத் தெரியவில்லை ஊமை வருகின்றன. வேஷம் போடும் ஊராள வந்தவருக்கு ! சென்னை என்ற பெயர் பிறக்காததற்கு முன்பே' தமிழ் நாடு உலகறிந்த பெயராய்த் திகழ்ந்திருக்கிறது. நாற்றமெடுத்து ஓடும் கூவத்தை அணைத்துக் கொண்டு நான்கை கைந்து மீனவர் குடிசைகளோடு திகழ்ந்த குக்கிராமத்தை சென்னப்ப நாய்க்கனிட மிருந்து ஆங்கிலேயர் பெற்றதற்குப் பிறகுதானே இந்தப் பெயர் உருவாயிற்று. அதை மாற்றியமைப்பு திலே என்ன தவறு உண்டாகிவிடும்? ல அழகான நவரத்னமாலை; அதிலே இச்சைக் குகந்த பச்சை; விழிகளைப் பறிக்கும் வைரம்; முழு நிலவுபோன்ற முத்து; குளுமை தரும் கோமேதகம்; மற்றும் புஷ்பராகம்; வைடூரியம்; பவளம், நீலம் போன்ற கற்கள் பதிந்திருக்கின்றன. அவைகளில் வைரத்தைத் தவிர மற்றவைகள் உதிர்ந்து விட்டபின் அதை நவரத்னமாலை என்று அழைப்பதிலே பொரு ளென்ன இருக்கமுடியும்? அதைப் போலத்தான் நிர்வாக வசதிக்குமட்டுமே முதன்மை தந்து-இந்த நாட்டு மக்களின் மொழி உணர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு - வெள்ளைத் துரைத்தனத்தார் ஆந்திரா, கன்னட, கேரளத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/162&oldid=1703711" இலிருந்து மீள்விக்கப்பட்டது