உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 அனுப்பினேன், தந்தியின் மூலமாக. ஏனென்றால் அவர்கள்தான் படாத பாடுபட்டு - பல நாள் இத் தொகுதியில் சூறாவளியெனச் சுற்றிச் சுழன்று பத்தாம் தேதி மாத்திரம் இருபத்தைந்து கூட்டங் களுக்குமேல் எனக்காகப் பேசியிருக்கிறார்கள், என் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள்! அதனால் தான் அவர்களுக்கே என் முதல் க வணக்கம் என்றேன், கேலிக்காக அல்ல, கிண்டலுக்காக அல்ல நான் முன்பே சொல்லியிருக்கிறேன், " நான் தேர்தலில் வெற்றி பெற்றால், முதலில் ஈரோடு நோக்கியோ, அல்லது திருச்சி நோக்கியோ, பெரியார் அவர்கள் எந்தத் திசையில் இருந்தாலும் அந்தத் திசையில் தெண்டனிட்டு வணங்குவேன்!' என்று, ஆகவேதான் தந்தி அனுப்பினேன். எனதருமை நண்பர் அம்பில் தர்மலிங்கம் தான் தந்தியைக் கையெழுத்திட்டு அனுப்பிவைத்தார். பெரியார் அவர்கள்கூட நினைத் திருக்கலாம்; தோற்றுப்போன காங்கிரசு அபேட்சகர் தர்மலிங்கந்தான் தந்தி கொடுத்திருக்கிறாரோ என்று! இப்படியாக, அவர்களுக்கும், என்னை எதிர்த்து வேலை செய்தவர்களுக்கும் தான் முதன் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், அதுதான் வெற்றிபெற்ற ஒரு அபேட்சகனின் கடமையும், நாணயமும், நேர்மையும், ஜனநாயக முறையுமாகும் என்பதை நான் உணர்ந்திருக் கிறேன். அதைத்தான் என் அண்ணனிடம் பாட மாகவும் கற்றிருக்கினே, பூரிப்போடும், புன்னகை வடிகின்ற முகத்தோடும் உங்களை நான் பார்த்த போதிலும், முதலிலேயே 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/21&oldid=1703208" இலிருந்து மீள்விக்கப்பட்டது