உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நான் திருத்தியாக வேண்டும்; அவர்களுக்கு நல்ல வனாக நடந்து கொண்டாக வேண்டும் அடுத்த தேர்தலிலே நான் நின்றால் அந்தப் பதினாலாயிரம் வோட்டுகளும் என்னுடைய உதயசூரியன் " பெட்டி யிலேயே விழுந்தாக வேண்டும். நான் வெற்றிபெற கிடைத்த வாக்குகள் இருபத் திரண்டாயிரம் அவர்கள் வேண்டுமானால் மகிழ்ச்சி யடையலாம்! அவர்கள் தாங்கள் விரும்பிய ஒருவனைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். நினைத்ததைச் செய்து முடித்த மகிழ்ச்சி அவர்களுக்கு. ஆனால் நான் முழு மகிழ்ச்சியடைய முடியவில்லை. ஆகவேதான் என்னை விரும்பாத அந்தப் பதினாலாயிரம் பேர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், "நீங்கள் எனக்கு வோட்டுப்போடாத காரணத்தால் - என்னை விரும் யாத காரணத்தால் - நிச்சயமாக நான் உங்களுக்குப் பகைவனாக இருக்கமாட்டேன். இந்த இருபத்திரண் டாயிரம் பேர்களுக்கு எப்படிஉண்மையுள்ள பணியாள னாக இருந்து பணியாற்றி வருவேனே அதைப் போலவே தான் உங்கள் பதினாலாயிரம் பேர்களுக்கும் கடமை மறவாத ஊழியனாக இருந்து பணியாற்று வேன் ' என்று உறுதி தருகிறேன். - அதுபோலவே இன்றைய தினம் இத்தொகுதி யில் என்னோடு போட்டியிட்டுத் தோற்றவர்கள் தோற்றவர்கள் என்று கூறவே நாக் கூசுகிறது - வெற்றிபெறாத தோழர்கள் - என் நண்பர்கள்தான்; இத்தொகுதியில் நான் தொண்டு செய்யும்போது என்னோடு ஒத்துழைக்க வேண்டியவர்கள். ஏனெனில் கருணாநிதியுடன் அவர்கள் செய்த போட்டி குத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/24&oldid=1703211" இலிருந்து மீள்விக்கப்பட்டது