பக்கம்:சோனாவின் பயணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“என்ன அழகு!” என்று கூறி சோனா வேகமாக நடக்கத் தொடங்கியது. விரைவில் அவை அந்த மரங்கள் இருந்த இடத்தை அடைந்தன. அம்மா தன்னுடைய தலையைத் தூக்கி மோப்பம் பிடித்தது. பிறகு, இடது புறம் திரும்பி, “இந்த வழியாக வா. தண்ணிர் வெகு அருகில் இருப்பதை மோப்பத்தால் கண்டுபிடித்து விட்டேன்” என்றது.

உயரமான மரங்களுக்கும், அடர்ந்த புதர்களுக்கும் நடுவே, தெளிந்த குளிர்ச்சியான நீர் நிரம்பிய ஒரு குளத்தை அவை கண்டன. குனிந்து, அந்நீரை வேகமாகக் குடித்தன. அருகிலே ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்த காகம், அவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தது.

சோனாவும், அதன் அம்மாவும் தண்ணீர் குடித்து முடித்ததும், “அடேயப்பா! நீங்கள் எவ்வளவு தண்ணிர் குடிக்கிறீர்கள்?” என்று பெருமூச்சு விட்டது, காகம். பிறகு, அந்தக் காகம் தன்னுடைய தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்துக் கொண்டே, “நான் பார்த்த மற்ற மிருகங்களே யெல்லாம் விட நிச்சயமாக நீங்கள்தான் அதிகமாகக் குடிக்கிறீர்கள். குடித்துக் குடித்தே இந்தக் குளத்தைப் பொட்டலாக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/8&oldid=482895" இலிருந்து மீள்விக்கப்பட்டது