பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஆராய்கின்ற திருவாய்ப்பாடி[1] நாராயணனும் இவ்வூர்ச் சபையாரும் சந்திராதித்தவல்[2] நடத்தவும் ஒப்புக் கொண்டனர்.

நடத்தாவிடில் ! ஸ்ரீ காரியம் ஆராய்பவன் அல்லது சபையாருள் ஒருவன் இத்தருமத்தை நடத்தாவிடில் நாடோறும் இருகாசு அன்றாள் கோவினுக்குத் தண்டம் கொடுத்தல் வேண்டும். அக்காசு கொண்டு திருமாலுக்குத் திருவிளக்கு எரிக்க வேண்டும். சபையார் எல்லோரும் சேர்ந்து இத்தருமத்தை நடத்தாவிடில் ஆறு காசு தண்டம் செலுத்த வேண்டும். இத்தண்டம் இறுத்தும் முட்டின்றிச் சந்திர சூரியர் உள்ளவரை இத்தருமம் நடத்தவேண்டும்.

இதிற்குறித்த வட்டி வீதம்

15 ஈழக்காசுகளுக்கு 6 ஈழக்காசுகள் வட்டியென இக்கல்லெழுத்துக் கூறுகிறது ; எனவே இங்குக் குறித்த வட்டி 100-க்கு 40 வீதம் ஆகிறது. இது அதிகமாகத் தோன்றுவது இயல்பே. இங்ஙனம் அதிக வட்டி பெறுவது மிக அருகி இருந்திருத்தல் வேண்டும். சில சமயத்து 37%-ம் 50%ம் வட்டி பெற்றதாகக் கல்லெழுத்துக்கள் பகர்கின்றன. கடன் தருதல் வாங்குதல் இவற்றின் தரத்துக்கு ஏற்பவும், மக்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படக்கூடிய அரசியல் நிலைக்கு ஏற்பவும், அதிக வட்டி வாங்கப்பெற்றது என்று கூறவும் முடியாது. எனவே அதிகவட்டி வாங்கியதேன் ? என்பதற்கு விடை எளிதில்


  1. திருவாய்ப்பாடி - சண்டீசப்பெருமான் தலம் போலும்! ( திருப்பனந்தாளுக்கு அண்மையிலுள்ளது.)
  2. சந்திராதித்தவல் - சந்திர சூரியர் உள்ளவரை.