பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

(வேங்கை - வேங்கிநாடு : கூடார் - பகைவர்; இரட்டம் - இரட்ட பாடி, ஒட்டம்-ஒட்ரதேசம்)

சிவபக்தி

இத்தகைய பெருவீரனாகிய மணவிற் கூத்தன் பெருஞ் சிவபக்தனாகத் திகழ்ந்தான். இவன் தில்லையிலும் திருவதிகையிலும் செய்த சிவப்பணிகள் அளப்பில. அவற்றைத் தில்லையம்பதியில் கல்லெழுத்தாக அமைந்துள்ள 36 வெண்பாக்களாலும், திருவதிகை வீரட்டானத்தில் சிலாசாசனம் செய்யப் பெற்றுள்ள இருபத்தைந்து வெண்பாக்களாலும் அறியலாம். (பிறநலப்பணிகள் என்ற தலைப்பிலும் காண்க.)

இவனைப்பற்றித் தில்லையில் காணும் பாடற் கல்லெழுத்துக்கள் தென்னிந்திய சாசனங்கள் நான்காவது தொகுதியில் 225-ம் எண்கொண்ட கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன (A. R. No. 120 of 1888); பெருந்தொகை என்ற நூலில் 1059-1094 எண்கொண்ட பாடல்களாக அச்சிடப்பெற்றுள்ளன. திருவதிகை வீரட்டானத்தில் நடராசப் பெருமான் சன்னிதியிலுள்ள இரண்டு தூண்களில் இவனைப்பற்றிய 25 வெண்பாக்கள் 1921-ஆம் ஆண்டுக்குரிய 369-ஆம் எண் கொண்ட கல்வெட்டாகப் படியெறிக்கப் பெற்றுள்ளன; பெருந்தொகை என்ற நூலிலும் 1095-1119 எண்கொண்ட பாடல்களாக அச்சிடப் பெற்றுள்ளன.

தில்லைத் திருப்பணிகள்

இவன் பகைவேந்தரை வென்று கொணர்ந்த செல்வமெலாம் கொண்டு தில்லைச்சிற்றம்பலத்துத் திருக்கொடுங்கைக்குப் பொன் வேய்ந்தான்; பொன்னம்பலத்தையும்