149
மோகன் திருமண்டபம்என்று ஒருமண்டபம் இரண்டாம் குலோத்துங்க சோழனது 15-ஆம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு விருத்தாசலத்தில் கானப்படுகிறது. எனவே ஏழிசைமோகன் என்பது இவன் குலத்தோருக்குரியசிறப்புப்பெயர் என அறியலாம். இராஜராஜக் காடவராயன் என்பது இவனது இயற்பெயராகும்.
வாணிலை கண்ட பெருமாள்
வானிலை என்பது புறப்பொருள் துறைகளில் ஒன்று. ’செற்றார்மேல் செலவமர்ந்து, கொற்றவாணாட் கொண்டன்று’ என்பது கொளு. இக் கொளுவிற் கண்டவண்ணம் வாளைப் புறவீடு செய்வித்துப் பகைவர்மேற் சென்று வாள்கொண்டு வெற்றி யெய்தியமையின் இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்புப் பெயர் வந்திருக்க வேண்டும். அதுவும் மூன்றாம் குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களில் செற்றார் மேல் சென்று வென்றமையின் இவன் இங்ஙனம் பாராட்டப் பெற்றான். இவனுக்குரிய இச்சிறப்புப்பெயர் மூன்றாம் குலோத்துங்கனின் 17-ஆம் ஆட்சியாண்டிற் குரிய (கி.பி. 1195) திரு வெண்ணெய் நல்லூர்க்கல்லெழுத்திலும் (313 of 1902), இச்சோழனுடைய 28-ஆம் ஆட்சியாண்டிற்குரிய விருத்தாசலம் கல்வெட்டிலும் (133 of 1900) குறிக்கப்பெற்றுள்ளன.
மணவாளப் பெருமாள்
மேலே கூறிய விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர்க் கல்லெழுத்துக்களினின்று இவனுக்கு மணவாளப் பெருமாள் என்ற சிறப்புப் பெயர் இருந்தது என்று தெரியவருகிறது. இவனுடைய போர் வீரத்தையும் பேராற்றலையும் கண்ட மூன்றாம் குலோத்துங்கசோழன் இவனுக்கு