பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

ஒருங்கு சேர்ந்து அரசியலுக்குக் கேடு சூழ்ந்த சிலருடன் பகைமை கொள்ள உடன்படிக்கை செய்து கொண்டது ஒன்று. கேடு சூழத் தொடங்கியவர்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையன், மகதை நாடாழ்வானான வாணகோவரையன் என்பவர்களோடு, இராஜராஜக் காடவராயனும் காணப்படுகின்றான். மேற்படி உடன்படிக்கையின் சில பகுதிகள் வருமாறு:-

“நாங்கள் ஒரு காலமும் இராஜ காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக் கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்துக் குலோத்துங்க சோழ வாணகோவரையனும், மகதை நாடாழ்வானான வாணகோவரையனும், இவர்கள் பக்கல் ஆளாதல் ஒலையாதல் போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும்... ... ... எங்களிலே ஒருவுரை வாணகோ வரையராதல், இராஜ ராஜக் காடவராயராதல் வினை செய்தாருண்டாகில் படையும் குதிரையும் முதலுக்கு நேராகக் கொண்டு குத்த கடவோமாகவும் (S. I. I. Vol VIII No. 106).

இப்பகுதியினின்று, இராஜராஜக் காடவராயன் தன்னலம் கருதி அரசனுக்கு முரண்பட்டவனுகக் கருதப்பட்டானென அறிய வருகிறது. இவன் செய்த அடாத செயல்களே பின்னர்ச் சோழப் பேரரசின் அழிவுக்கு வழி கோலியன. தன்னலங் கருதிச் செய்த செயலானது ஒரு பேரரசுக்கே முடிவு கோலியதாயிற்று!

ஏழிசை மோகன் சந்தி

சேந்த மங்கலத்துள் “சகலபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார்க்கு யாண்டு அஞ்சாவது“ என்று தொடங்கி ஒரு கல்வெட்டுள்ளது