பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33

திற்கும், திருக்கோயிலுக்கு ஸ்ரீபலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் 2920 குழி நிலம் அளித்த உடையார் தேவியார் வில்லவன் மகாதேவியார்[1] ஆகிய இவ்வைவரும் பார்த்திவேந்திரபன்மனுடைய மகாதேவியராக அறியப் பெறுகின்றனறர்.

திருப்பாற்கடல் கல்லெழுத்து

திருப்பாற்கடல் என்பது வட ஆற்காடு மாவட்டம் காவிரிப் பாக்கத்துக்கு அண்மையில் உள்ள ஓரூர். இவ்வூரில் கரபுரேசுவரர் கோயில் இறையக வடபுறச் சுவரில் இக்கல்லெழுத்துக் காணப்பெறுகிறது.[2] இது பார்த்தி வேந்திராதிபன்மனது மூன்றாவது ஆட்சியாண்டுக் கல் வெட்டாகும். திருப்பாற் கடலில் பெரியதளி அபிஷேக மண்டபத்தில் படுவூர்க்கோட்டத்துக்[3] காவிரிப்பாக்கமான[4] அவநிநாராயணச் சதுர்வேதிமங்கலத்துச் சபை யாரும், அந்த ஆண்டுக்குரிய சம்வத்ஸர-, தோட்ட-, ஏரி-, கழனி-, பஞ்சவார-, கணக்கு-, கலிங்கு-, தடிவழி வாரியப் பெருமக்களும்[5] பட்டர்,[6] விசிட்டர்,[7]


  1. உத்தரமேரூர் - 11-ஆம் ஆண்டு, S.I.I. III 193.
  2. S. I. I. III 156; 692 of 1904.
  3. படுவூர்க் கோட்டம் - தொண்டை மண்டலத்து 24 கோட்டங்களுள் ஒன்று.
  4. காவிரிப்பாக்கம் - இது அவதிநாராயணச் சதுர்வேதி மங்கலம் எனப்பெற்றது. அவதிநாராயணன் என்பது மூன்றாம் நந்திவர்மனுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று.
  5. பெருமக்கள் - அவையின் உறுப்பினர்.
  6. பட்டர் - கோயில் பூசகர்.
  7. விசிட்டர் - ஊரிலுள்ள சான்றோர்.
3