36
சம்வத்ஸ்ரவாரியம் : இவ்வாரியப் பெருமக்கள் தமக்குரிய அலுவல்களை ஓராண்டுக் காலம் இருந்து ஆற்றும் தகுதியுடையர் ஆவர். அறநிலையங்களைக் கண்காணிப்பதும், நியாயம் வழங்குவதும் இவர் கடமையாகும். இவ்வாரியம் எல்லா வாரியங்களையும்விடச் செல்வாக்குள்ளது; சிறப்பு வாய்ந்தது. மற்ற வாரியப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கு முன்னதாக இவ்வாரியப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தோட்ட வாரியத்திலோ ஏரி வாரியத்திலோ இருந்து பணியாற்றினவர்களும், கல்வியறிவில் சிறப்புடையவர்களும், வயதில் முதிர்ந்தவர்களுமே இவ்வாரியத்துக்குத் தகுதி யுடையராவர். இதில் பன்னிரண்டு உறுப்பினர் இருப்பர்.[1]
தோட்டவாரியம் : 'நிலங்களைப்பற்றிய' , எல்லா விஷயங்களையும் கண்காணிப்பது தோட்டவாரியரது கடமை என்பர் திரு. பண்டாரத்தார் அவர்கள். தோட்டங்களைப் பற்றியவற்றைக் கண்காணிப்பதும் இவர் கடமையாகலாம்.
ஏரிவாரியம் : நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பயன்படச் செய்வது இவர் கடமை என்பது திரு. பண்டாரத்தார் கருத்து. சிற்றூர்களில் உள்ள ஏரிகளை அடிக்கடி பழுதுபார்க்க வேண்டிய செலவுக்காக நிலங்கள் ஊரவையார் பார்வையில் விடப்பட்டிருக்கும். அவை ஏரிப்பட்டி எனப்பெறும். ஏரிப்பட்டியை மேற்பார்வையிட்டவர்
- ↑ Dr. Meenakshi - Administration and Social life under the Pallavas – P. 128: Footnote No. 25.