பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பொன்வாரியம் : இக்கல்லெழுத்தில் 'பொன்வாரியம் என்று ஒரு வாரியம்' குறிக்கப்பெறவில்லை. ’’பல்வகையானும் திரட்டப்படும் காசுகளை ஆராய்வு செய்வது பொன்வாரியக்காரர் பொறுப்பாக இருந்தது’’ என்று பண்டித எல். உலகநாதபிள்ளை அவர்கள் கூறுவர்.

நிலத்தை அளக்கும் கோல்

திருப்பாற்கடல் கல்லெழுத்தில் நிலம் அளக்கும் கோல், கழனிக் கோல் என்று கூறப்பெற்றுள்ளது. காவனூர்க் கல்லெழுத்தில்[1] நிலம் அளக்கும் கோல் 'கடிகைக் களத்துக் கோல்' என்று சொல்லப்பெற்றுள்ளது. முதல் இராசராசனது ராஜக்கல் கல்வெட்டிலும் இக்கோல் குறிக்கப்பெற்றுள்ளது.[2]

நில வருமானத்தைச் செலவுசெய்யுமாறு

மேலே கூறப்பட்ட 1400 குழியும் முன் இருந்த பூமியோடு திருக்கரபுரத்துப் பெருமானடிகளுக்கு இறையிலி அர்ச்சனாபோக[3] மாக அளிக்கப்பட்டது. இந்நில வருமானத்தைக்கொண்டு திருக்கரபுரத்துப் பெருமானடிகளும் நிசதம் இருநாழி அரிசியால் ஒருபொழுது திரு


  1. இரண்டாம் ஆதித்தனது 8-ஆம் ஆண்டு, 160 of 1921; பார்த்திவேந்திரவர்மனது 18-ஆம் ஆண்டு, 156 of 1 9521.
  2. 172 Of 192 1
  3. அர்ச்சனா போகம் - அருச்சனை ஆராதனைகளுக்காக அளிக்கப் பெறுவது.