பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பிற்கல்லெழுத்துச் செய்திகள்

வியாக்கியான விருத்தி

திருக்கோவில்களில் வியாக்கியான மண்டபங்கள் இருந்தன. அங்குப் பெரும்புலவர்கள் இலக்கணத்தை விளக்கி விரிவுரை யாற்றுவர். இங்ஙனம் இலக்கண விரிவுரை நடாத்துபவர்க்கு ஊதியம் அளித்தற்பொருட்டு நிலம் ஒதுக்கப்பெறுவதுண்டு; இது குறித்து உத்திரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலில் வடபுறத்துச் சுவரில் உள்ள பார்த்திவேந்திர பன்மனுடைய 3-ஆம்ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது.[1] வியாகரன விருத்தியாக (1) பத்ரங்கது வாசுதேவபட்ட சோமாசியார் 3-ஆம் தரம் 480 குழியும், (2) ஓதிமுகில் மாதவபட்டர் தலைதரம் 720 குழியும், (3) துர்பில் நரசிங்க கிரமவித்தன் தலைதரம் 220 குழியும், (4) இவையிற்றுக்கு நீர்பாயும் வாய்க்கால் 35 குழியும் ஆக 1455 குழி நிலம் அளித்தனர் என்று அறியப்படுகிறது.[2]

விஷஹரபோகம்

மக்களின் உடற்பினிை போக்க ஆதுரசாலைகள் பல முற்காலத்து இருந்தன. அங்குச் சல்லியக்கிரியை


  1. 41 18 of 1898; S. I. I. III 161.
  2. திருவொற்றியூரில் வியாகரணதான வியாக்கியான மண்டபம் ஒன்று இருந்தது. அங்கு வியாகரணம் கற்பிப்பார்க்கும், கற்பார்க்கும் ஆக முன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிபந்தம் ஏற்படுத்தப்பெற்றது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பொன் வரி என்று ஒரு வரி வசூலித்து அவ்வியாக்கியான மண்டபத்தைப் பழுது பார்த்தற்கு அளித்ததன், ( 2O1 of 1912 and 11O of 1912; தென்னிந்திய கோயில் சாஸனங்கள் எண் 5 18, 5.10.)