பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

னுக்குப் பன்னை புரத்தவர் 100 காடி நெல் வட்டியாகக் கோயிலுக்குத் தரவேண்டும் என்று அளித்தார்.[1] இங்ஙனம் வட்டி விகிதம் அறிதல் தகும்.

முகத்தலளவை

“காடி’’ என்பதே பெரும்பாலும் காணும் அளவையாகும். காடி என்பது கலத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். தக்கோலம் கல்லெழுத்தில்[2] ’’கவாரமொழி’’ என்று ஒரு மரக்காலின் பெயர் கூறப்படுகிறது, “ஊரகத்து நின்றார் காடக்கீழ் நாழி’’ என்று ஒரு நாழியின் பெயர் ஒரு கல்லெழுத்தில் காணப்பெறுகிறது.[3]

நிஷ்கா

(வட ஆர்க்காடு மாவட்டம் பிரமதேசத்திலுள்ள பார்த்தி வேந்திரனது 13-ஆம் ஆண்டுக் கல்லெழுத்து மூவாயிரவன் திரைராஜ்ய கடிக மத்யஸ்தன் என்பான் ஒரு அபிஷேக பிராமணனுக்கு ஊதியமளிக்க 30 கழஞ்சு பொன் அளித்த செய்தியை உணர்த்துகிறது.[4] இதில் ஒரு நிஷ்கா என்பது ஒரு கழஞ்சுக்குச் சமமாகும் என்றுள்ளது. முதற்பராந்தகனது 30-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்தில் தமிழ்ப் பகுதியில் “கழஞ்சு’’ என்று குறித்து, வடமொழிப்பகுதியில் “நிஷ்கா’’ என்று குறிக்கப்பெற்றுள்ளது.[5] முதற்


  1. 18 Of 19321.
  2. 13 of 1897.
  3. 19 of 1921.
  4. 197 of 1915
  5. 17O of 1912; S. I. I. III 104.