பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

திருமாற்பேற்றில்

தொண்டை நாட்டுப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாகத் திகழ்வது திருமாற்பேறு. அவ்வூரில் கண்ட சில கல்லெழுத்துக்களில் மதுராந்தகன் கண்டராதித்தன் குறிக்கப் பெறுகிறான். பரகேசரி வரமனது[1] 14-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் (280 of 1906) திருமாற்பேற்று இறைவனுக்குத் திங்கள்தோறும் நூற்றெட்டுக் குடங்கள் தேன் நெய் தயிர் அபிடேகம் செய்ய மதுராந்தகன் கண்டராதித்தனால் நிபந்தம் அளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

இவனே இவ்வூர்க் கோயிலில் இராச கேசரிவர்மனது[2] மூன்றாவது ஆட்சியாண்டில் ஒரு விளக்கு வைக்கப் பதினைந்து கழஞ்சு (பொன்) அளித்திருக்கிறான் (285 of 1906).

இராசகேசரி வர்மனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஒரு நில விற்பனைச் செய்தி கூறுமிடத்தும் இவன் குறிக்கப் பெறுகிறான் (294 of 1906).

அதுவே ஆட்சி யாண்டில் இவன் ஒரு விளக்கு எரிக்கப் பதினைந்து கழஞ்சுபொன் அளித்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளான் (296 of 1906).

முதலாம் இராசராச சோழனுடைய நான்காம் ஆட்சியாண்டில் இவன் திருமாற்பேறு அக்னிசுவரர்


  1. உத்தம சோழனாக இருத்தல் கூடும்.
  2. இராசகேசரிமர்மன் இராசராசன் (985-1014)