பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


பரகேசரிபுரத்து ககரத்தார் கொடுத்தது

ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டிற்று ஒன்றும் நாண்படு கண்ணும் கொக்கு வாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழு மஞ்சாடி; விலை காசு மூன்று.

4. திருஞானசம்பந்தர் பிரதிமம்

பாதாதி கேசாந்தம் இருபத்திருவிரலே இரண்டு தோரை உயரத்து இரண்டு திருக்கை யுடையாராகக் கனமாக எழுந்தருளுவிக்கப்பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் இருவிரலே இரண்டுதோரை உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் ஒன்பதிற்று விரலே இரண்டு தோரைச் சமசதுரத்து நால்விரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்றுட்பட நிறை கழஞ்சே இரண்டு மஞ்சாடிக்கு விலை 1 காசு. ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்றுட்பட நிறை கழஞ்சே மஞ்சாடியும் குன்றிக்கு விலை 1 காசு. தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி 56-ம், ருத்ராக்ஷம் 56-ம் உட்பட நிறை எண் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றிக்கு விலை 25 காசு. திருப்பொற்பூ ஒன்று, பொன்கழஞ்சே குன்றி. திருக்கைக் காறை ஒன்று, பொன் இரு கழஞ்சே குன்றி. திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி. திருப்பட்டிகை ஒன்று, பொன் இருகழஞ்சு.

பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது

ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டியது ஒன்றும்

நாண்படு கண்ணும் கொக்கு வாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழு மஞ்சாடிக்கு விலைகாசு மூன்றேகால்.

5