பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

செய்து சோழர்களுக்கு வெற்றிதந்த சேனாபதிகள் ஆவர். ஜெயசிம்ம குலாந்தக னென்பது ’மேலைச் சளுக்கியர் குலத்துக்குக் காலன் போன்றவன்’ என்று பொருள்படும். எனவே மேலேச்சளுக்கியர்களோடு இடையீடின்றிப் போருடற்றிய இராசாதிராசனுக்கு இச்சிறப்புப் பெயர் இருந்திருத்தல் கூடும். ஆகவே தந்தையும் மகனும் இராசாதிராசன் I காலத்துப் போர்களிலே படைத் தலைமை பூண்டு சோழர்களுக்கு வெற்றியளித்தவராவர். பிரம்மாதிராஜர் என்ற பட்டம் அளிக்கப் பெற்றமையின் இவர்கள் பிராமணர்கள் என்பது தெளிவு.

சீவிதம்

வீர ராரேந்திரனுடைய 5-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில், இவ்வூர் ஜீவிதமுடைய சேனாபதிகள் ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராஜர் தகப்பனார் மஞ்சிப் பயனரான ஜெயசிங்க குலாந்தகப் பிரம மாராயர் பக்கல் ஸ்வம் கொண்டு முன்பு இவர்க்கு இறையிலியாகக் கொடுத்து இவர் அனுபவித்து வருகிற நிலமாவது என்ற பகுதியினின்று சில செய்திகளை நாம் அறிகிறோம். அரசியல் அதிகாரிகளுக்கு அரசாங்கப் பொருள் நிலையத்திலிருந்து சம்பளம் கொடுக்கும் பழக்கம் முன்னாளில் இல்லை. அவரவர் தகுதிக்கேற்ப அன்னேர் வானாள் முழுதும் அனுபவித்துக் கொள்ளுமாறு சோழ மன்னர்களால் நிலம் அளிக்கப்பெற்றது. அங்ஙனம் அளிக்கப் பெற்ற நிலம் ஜீவிதம் எனப்படும். அன்னோர் மக்களுக்கு இதில் சிறிதும் உரிமையில்லை. அவர்கள் குறிப்பிடத்தக்க பெருந்தொண்டுகள் புரிந்து மிகு புகழ் பெற்றால் அன்னோர் நாளிலேயே ஜீவித வகையிலிருந்து மாற்றி அவர்கள் வழித்தோன்றல்களும் அனுபவித்துக்