பக்கம்:சோழர் வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

சோழர் வரலாறு



ஆட்சி முறை : இராசேந்திரன் முதலியோர் ஆண்ட ஆண்டுகளை வரையறை செய்து பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் இங்ஙனம் கூறியுள்ளனர்[1].

1. இராசகேசரி - இராசாதிராசன் கி.பி.1018-1054.

2. பரகேசரி - இராசேந்திர சோழ தேவன் கி.பி.1052-1064. (இவன் மகன் இராசகேசரி - இராசமகேந்திரன் தந்தை காலத்தில் (கி.பி. 1060-1073) இளவரசனாக இருந்து இறந்தான்).

3. இராசகேசரி - வீர இராசேந்திரன் கி.பி. 1063-1059. (இவனுக்கு வீரசோழன், கரிகால்சோழன், என்னும் பெயர்கள் உண்டு.

4. பரகேசரி - அதிராசேந்திரன் கி.பி. 1069-1070 (இவன் வீர இராசேந்திரன் மகன்).

இராசாதிராசன்
(கி.பி. 1018 - 1054)

இராசாதிராசன்தன்தந்தையுடன் 26ஆண்டுகள் சோழப் பேரரசை ஆட்சி புரிந்தான். தந்தை காலத்தில் நடைபெற்ற எல்லாப் போர்களிலும் கலந்து கொண்டான்; தந்தை இறந்தவுடன் தான் அரசனானான். உடனே தன் தம்பியான இராசேந்திரசோழ தேவனை இளவரசனாக முடிசூட்டினான்.

சாளுக்கியப் போர் : (1) இராசேந்திரன் இறக்குந் தறுவாயில் அல்லது இறந்தவுடன் கி.பி.1044-45-இல் சோழர்க்கும் சாளுக்கியர்க்கும் போர் நடந்தது. இராசாதிராசன், அப்போரில், சாளுக்கியர்க்கு உதவியாக வந்த சிற்றரசர் பலரையும் சாளுக்கியர் சேனையையும் முற்றிலும் முறியடித்தான்; காம்பிலி நகரத்தில் இருந்த சாளுக்கியர் அரண்மனையை அழித்தான்[2].


  1. Vide ‘his’ Cholas’, Vol.I.p.293.
  2. S.I.I. Vol. 3, No.28.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/246&oldid=492667" இலிருந்து மீள்விக்கப்பட்டது