பக்கம்:சோழர் வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

253



சோமேசுவரனைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். உடனே போர் மூண்டது. திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுல ஜயகேசி, தேவகிரியை ஆண்ட யாதவ அரசன், ஹொய்சளனான எறியங்கன் முதலிய அரசர் விக்கிர மாதித்தன் பக்கம் நின்றனர். விக்கிரமாதித்தன்[1] முதலிற் படையெடுத்துக் கோலார் வரை சென்றான். குலோத் துங்கன் அவனைத் தடுத்துத் துங்கபத்திரைவரைத் துரத்திச் சென்றான்; வழியில் அளத்தி, மணலூர் என்னும் இடங்களிற் போர் நடந்தது. முடிவில் போர்துங்கபத்திரை ஆற்றங்கரையில் கடுமையாக நடந்தது. போரில் சோமேசுவரன் தோற்று, விக்கிரமாதித்தனிடம் சிறைப்பட்டு நாட்டை இழந்தான்[2]. குலோத்துங்கனை வெல்ல முயன்ற விக்கிரமாதித்தன் இறுதியில் தன் தமையனை வென்று, இரட்டபாடி முழுவதும் தன் ஆட்சிக்கு உட்படுத்திக் கொண்டான். ஜயசிம்மன் வனவாசியைத் தலை நகராகக்கொண்டு இரட்டபாடியின் தென் பகுதியை ஆண்டான். இப்போரில், மைசூர் நாட்டின் பெரும்பகுதி குலோத்துங்கன் கைப்பட்டது. இஃது உண்மை என்பதை அங்குக் கிடைத்த அவனுடைய கல்வெட்டுகள் மெய்ப்பிக்கின்றன. குலோத்துங்கன் நவிலையில் யானை களைப் பிடித்தான் என்று பரணி பகர்கின்றது. இவன் மேற்கடலை அடைந்து, வனவாசியையும் வென்றான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கிறது.

இலங்கை பிரிந்தது : இலங்கையின் தென் பகுதியை ஆண்ட விசயபாகு கி.பி.1070-ல் வடபகுதியைத் தனதாக்க முற்பட்டான். அந்த ஆண்டில் சோழ நாட்டில் குழப்பம் மிகுந்திருந்தது. அது, குலோத்துங்கன் பட்டம் பெற்றுப் பேரரசில் அமைதி உண்டாக்க முயன்ற காலம். ஆதலின், அவன் இலங்கை மீது கவனம் செலுத்த முடியவில்லை. அச்சமயம் விசயபாகு படையெடுத்துச் சென்று


  1. Vikrmaditya charita, p.30
  2. Ibid, p.34.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/255&oldid=491868" இலிருந்து மீள்விக்கப்பட்டது