பக்கம்:சோழர் வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

சோழர் வரலாறு



கிடைத்துள்ளன. ஆதலின், கி.பி.1115-இல் கங்கபாடி கை மாறியது உண்மையாகும்.

வெளிநாடுகளின் தொடர்பு : குலோத்துங்கன் ஆட்சிக்குட்பட்ட சோழப் பெருநாடு வெளிநாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. கடாரத்துடனும் சீனத்துடனும் கொண்டிருந்த தொடர்பு முன்னரே விளக்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் வடநாடுகளுடன் சோழப் பெருநாடு கொண்டிருந்த தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. கன்னோசி அரசனான மதனபாலன் அல்லது அவன் மகனான கோவிந்த சந்திரனது மெய்ப்புகழ் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் முதலில் குலோத்துங்கனது 41-ஆம் ஆட்சி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது; பிறகு கன்னோசி அரசன் புகழ் பொறிக்கப்பட்டுள்ளது; பின்னர்க் கல்வெட்டின் காரணம் வரையப்பட்டுள்ளது. கன்னோசிக்கும் சோழ நாட்டிற்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது தெரியவில்லை. கன்னோசி நாட்டார் கதிரவன் வணக்கத்திற் கைதேர்ந்தவர். சோழ நாட்டில் குலோத்துங்கன் ஆட்சியில் அவ்வணக்கம் சிறப்பிடம் பெற்றிருந்தது[1]. சோழ நாட்டு வாகீசுவரரrவிதர் என்பவர் ஒரிஸ்ஸா நாட்டுச் சாக்கியரசுழிதர் மாணவராவர் என்பதைக் கோவிந்த சந்திரன் செப்புப்பட்டயம் கூறுகிறது. கோவிந்த சந்திரன் (கன்னோசி அரசன்) விட்ட கல்வெட்டின் காலம் கி.பி.1129 ஆகும்[2]. காம்போச நாட்டு அரசன் குலோத்துங்கனுக்கு விலை உயர்ந்த கல் ஒன்றைக் காட்டினான்; பிறகு அதனை அவனுக்குப் பரிசாக அளித்தான். குலோத்துங்கன் அதனைச் சிதம்பரம் உட்கோவிற்கு எதிரேயுள்ள சுவரிற் பதித்தான் என்று


  1. A.R.E. 1927, Vol.II, 19-21.
  2. Ep. Ind VI. II, No.3.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/268&oldid=492439" இலிருந்து மீள்விக்கப்பட்டது