பக்கம்:சோழர் வரலாறு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

சோழர் வரலாறு



போரைக் குறித்தில. ஆதலின் அப்பிற்பட்ட 15 ஆண்டுகள் அமைதி நிலவிய காலம் எனக் கொள்ளலாம். அக்காலத்திற்றான் இவனது பேரவையில் புலவர் பலர் தமிழ் வளர்த்தனர் போலும்! இவன் காலத்து இருந்த புலவர் (1) குலோத்துங்கன் கோவை ஆசிரியர், (2) வீராந்தப் பல்லவராயர், (3) சங்கர சோழன் உலா ஆசிரியர், (4) கம்பர், (5) குணவீர பண்டிதர், (6) அரும்பாக்கத்து அருள்நிலை விசாகன், 97) திருவரங்கத் தமுதனார், (8) பவணந்தி முனிவர் முதலியோர் ஆவர். இவர்களைப்பற்றி விரிவாக ‘இலக்கிய வளர்ச்சி’ என்னும் தலைப்பில் (பிற்பகுதியில்) காண்க.

குலோத்துங்கன் கோவை ஆசிரியர் இக்குலோத்துங்கனை, ‘எண்ணெண் கலையே தெரியும் குலோத்துங்க சோழன்’ என்றும், ‘கலைவாரி’ என்றும், ‘பல நூற் புலவோர்க்குத் தாபரன்’ எனவும் புகழ்தலால், இவன் கல்வி கேள்விகளிற் சிறந்தவன் என்பதும் புலவரைப் போற்றின வன் என்பதும் அறியக்கிடக்கின்றன. அவர் இவனை, ‘தமிழ்வாணர் தெய்வக் கவியாபரணன்’ எனவும் ‘பாவலர் காவியம் சூடும் குலோத்துங்க சோழன்’ எனவும். ‘கொழித்துத் தமிழ் கொள்ளும் கிள்ளி’ எனவும். வியன்பார் அனைத்தும் கோதே பிரித்தெறி கோமான்’ எனவும் பாராட்டி இருத்தலால், இவன் புலமை மிக்கவன் என்பதும், புலவர் தகுதி அறிந்து பரிசளித்தவன் என்பதும் விளங்குகின்றன அல்லவா? இவன் இங்ஙனம் பெரும் புலவனாக இருத்தமையாற்றான் - கல்வியிற் சிறந்த கம்பர் தம் அவைக்களத்தில் இருக்கும் பேற்றைப் பெற்றான்; உலகம் புகழும் பேற்றைப் பெற்றான்! இராமாயணம் உள்ளளவும் கம்பர் பெயர் உள்ளளவும் குலோத்துங்கன் பெயர் நின்று நிலவும் அன்றோ?

வீராந்தப்பல்லவ ராயர் : இவர் குலோத்துங்கன் அவைப் புலவர். இவர் வேண்டுகோட்படி அரசன் ‘காலவிநோத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/326&oldid=1234302" இலிருந்து மீள்விக்கப்பட்டது